Wednesday, January 22, 2020

மன அழுத்த மேலாண்மை

மன அழுத்த மேலாண்மை

·         மன அழுத்தம் என்பது உள்ளே இருந்தோ அல்லது வெளிப்புற சமூக சூழ்நிலைகளாலும் ஏற்படும் எதிர்மறை  மாற்றமாகும்.
·          வெளிப்புற சூழ்நிலைகள் மனதளவிலோ சமூக அளவிலோ ஏற்படலாம். உள்ப்புற காரணங்கள் நோயினாலோ அல்லது வேறு மருத்துவ காரணங்களுக்காக ஏற்படலாம். இம்மாதிரியான இடர் சூழ்நிலைகளை சமாளிக்க முடியாமல் நமது மனம் திணறும் பொழுது மன அழுத்தம் உருவாகிறது.
·         இடர் சூழ்நிலைகள் தொடர்ந்து இருக்குமேயானால் அது மனதளவிலும் உடலளவிலும் எதிர்மறையான மாற்றங்களை உருவாக்குகிறது. இதுவே நமது நோய்க்கு அடிப்படை.
·         இடர் சூழ்நிலைகளை சமாளிக்கும் திறன் மனிதருக்கு மனிதர் வேறுபடலாம். இவ்வேறுபாடு நாம் மன அழுத்தத்தை உணர்வதை உறுதி செய்கிறது
·         எல்லோரும் எல்லா சூழ்நிலைகளுக்கும் ஒரே மாதிரியாக மனமாற்றங்களை வெளிப்படுத்துவதில்லை.
பரிவர்த்தனை முறை
·         நாம் நமது சூழ்நிலைகள் அல்லது மற்ற மனிதர்களுடன் ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்பு அடிப்படையில் ஒரு பரிவர்த்தனை ஆகும். இப் பரிவர்த்தனையில் ஏற்படும் தவறுகள் மன அழுத்தம் உருவாக காரணமாகிறது
·          சூழ்நிலைகளை நாம் எடுத்துக் கொள்ளும் விதம் அதை புரிந்து கொள்ளும் விதம் நமது கருத்துக்களை வெளிப்படுத்தும் விதம் இவற்றில் ஏற்படும் குறைபாடுகள் மன அழுத்தம் உருவாக காரணமாகின்றன.
·         எனவே மன அழுத்தம் என்பது வெளிப்புற காரணங்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. அவ்விடர்பாடுகளுக்கு நாம் எவ்வாறு மாறி செயல்படுகிறோம் என்பது மன அழுத்தத்தை தீர்மானிக்கிறது. எனவே நம் சமாளிக்கும் திறனை வளர்த்துக் கொள்ளும் பொழுது மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

மன அழுத்த மேலாண்மை
·         மேற்சொன்னபடி மன அழுத்தத்தை உருவாக்கும் காரணங்களை உள்ளிருந்தே தேடி அதை நேர்மறையாக மாற்றிக்கொண்டு மன அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டும்
·         மன அழுத்தம் மேலாண்மை இரண்டு வகைப்படும்
1.    மன அழுத்தத்தால் உருவாகும் எதிர்மறை விளைவுகளை போக்கிக் கொள்ளுதல்
2.     நமது எண்ணங்களில் ஏற்படும் குறைகளை சீர்திருத்திக் கொண்டு வளைந்து கொடுக்கும் தன்மையை அதிகரித்து கொள்ளுதல்
மன அழுத்த மேலாண்மை முறைகள்:
1.     உடற்பயிற்சி- உடற்பயிற்சி நமது உடலுக்கு மட்டுமல்லாமல் மனதிற்கும் அழுத்தங்களை தாங்கிக்கொள்ளும் பஞ்சாக பயன்படுகிறது தினந்தோறும் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யவும் ஒருவருடைய உடல்வாகுக்கு ஏற்றபடி நடத்தல் ஓடுதல் படி ஏறுதல் யோகா நீச்சல் முதலான உடற் பயிற்சிகளை மேற்கொள்ளுதல்
2.     சமூக செயல்பாடுகள் - ஒருவர் மற்றவருடன் சேர்ந்து ஈடுபடும் சமூக செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுதல். குழுவாக சேர்ந்து தனக்கோ சமூகத்துக்கோ பயன்படும்படி ஏதாவது செயலில் ஈடுபடும் பொழுது அவருக்கு ஒரு மன நிறைவும் மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கிறது
3.    பொழுதுபோக்கு மனதுக்குப் பிடித்தமான ஏதாவது ஒரு பொழுதுபோக்கை கற்றுக்கொண்டு தொடர்ந்து அதில் ஈடுபடுதல்
4.    தியானம், இசை மற்றும் படித்தல்
5.    நேர மேலாண்மை
6.    தன்னிலை சாந்தபடுத்துதல்- அமர்ந்துகொண்டு உடலில் ஏற்படும் மாற்றங்களை கவனித்தல் மற்றும் நேர்மறையான கூற்றுகளை திரும்பத் திரும்ப பயன்படுத்தி உடலை சாந்தபடுத்துதல்
7.     மைண்ட்ஃபுல்னெஸ் எனும் மனதை கவனித்தல் - பொறுமையாக மூச்சை கவனித்து கொண்டு நம் மனதில் எழும் என்ன ஓட்டங்களை கவனித்தல். ஒரு நாளைக்கு இதை நான்கைந்து முறை திரும்பத் திரும்ப செய்யும் பொழுது நாம் எப்படிச் சிந்திக்கிறோம் எவ்வாறு நமது மனம் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது என்பதை கவனித்து அதை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது
8.     ஆழமான சுவாசம்-  முதுகெலும்பிகள் தளர்வாக இருக்கும் பொழுது வயிற்றின் மூலமாகவே சுவாசிக்கின்றன. எனவே நாம் வயிற்றின் மூலம் ஆழ் சுவாசம் மேற்கொள்ளும் பொழுது ஒரு தளர்வுநிலை ஏற்படுகிறது
9.    தொடர் உடல் தளர்வு பயிற்சி - நமது உடல் தசைகளை கடினமாக இறுக்கி விரைவாக தளர்த்தும் பொழுது உடல் முழுவதும் ஒரு தளர்வு நிலை உருவாகிறது ஒவ்வொரு தசை மண்டலங்களையும் இறுக்கி தளர்த்தி பயிற்சி செய்யும் பொழுது உடல் முழுவதுமே தளர்வு நிலை உருவாகி மன அழுத்தத்தால் ஏற்படும் எதிர்மறையான எழுச்சி நிலையை குறைத்து சந்தோசத்தை உருவாகிறது.
 சிந்தனை சீர்திருத்த பயிற்சி - மனதிலும் சூழ்நிலைகளிலும் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் நம் மனதில் பொதிந்து கிடக்கும் எண்ண தவறுகளே காரணம். அவ்வெண்ண தவறுகளை கண்டறிந்து மனநல மருத்துவரின் துணையுடன் நேர்மறையான எண்ணங்களை உருவாக்கிக் கொண்டு அதை பயிற்சிகளின் மூலம் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.  இது நாள்பட்ட மன அழுத்தம் மனச்சோர்வு மனப்பதற்றம் போன்ற பிரச்சனைகளால் அவதியுறும் நபர்களுக்கு ஏற்ற ஒரு சிகிச்சை முறையாகும்.  இது தொடர்ந்து தேவைப்படும் 

No comments:

Post a Comment