Wednesday, January 22, 2020

மிகை (அதிகம்) உண்ணுதல் நோய்


மிகை (அதிகம்) உண்ணுதல் நோய்
(BINGE EATING DISORDER)


அதிவேக வாழ்க்கைமுறையால் மாறி வரும் உணவுப்பழக்கம் மற்றும் போதிய உடற்பயிற்சியின்மையால் உடற்பருமன் மற்றும் அது சார்ந்த உடல்நலப் பிரச்சனைகளால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் குறிப்பிட்ட பகுதியினருக்கு “மிகை உண்ணுதல் நோய்” அதிக அளவில் காணப்படுகிறது.  உலக சுகாதார நிறுவனம் 1.4% மக்களுக்கு இந்நோய் இருப்பதாக எச்சரிக்கிறது.  இருப்பினும் இதனைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை.

·         மிகை உண்ணுதல் நோய் என்பது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அளவுக்கு அதிகமாக, கட்டுப்பாடின்றி உண்ணுதல் ஆகும்.  இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறையாவது தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு இருந்தால் இந்நோய் இருப்பதாகக் கொள்ளலாம்.
·         பசியில்லாத போதும் உண்பது, மிகவேகமாக உண்பது, கட்டுப்பாடின்றி உண்பது, மற்றவர்களுக்குத் தெரியாமல் உண்பது மற்றும் உணவு உண்டபிறகு தன்னைத் தானே நொந்து கொள்ளுதல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
·         இந்நோய் ஆண்களை விட பெண்களை அதிகமாக பாதிக்கிறது.  மாத விடாய் பிரச்சனைகள், ஹார்மோன் \தொந்தரவுகள், மன அழுத்தம், தன் உடல் அழகைப் பற்றிய சிந்தனைகள், உறவுகளில் விரிசல், பணியிட வேலைப்பளு ஆகியவை இதற்கு காரணமாகிறது. மாதவிடாய் சுழற்சியின் பிற்பகுதியில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம் காரணமாக கூறப்படுகிறது.
·         மன அழுத்தம், எதிர்மறை உணர்வுகள், கோபம், பதற்றம் உள்ளவர்களை அதிகமாக பாதிக்கிறது.
·         மனம் இறுக்கமான சூழ்நிலையில் அதிகமாக உண்ணும்போது, மூளையில் இரசாயன மாற்றங்கள் மூலம் ஒரு திருப்தி உணர்வை ஏற்படுத்தி மன இறுக்கத்தை குறைக்கிறது.  எனவே அதீத மன இறுக்கச் சூழலில் உள்ளவர்கள் மிகை உண்ணுதல் நோய்க்கு அதிகம் ஆளாகிறார்கள்.
·         இவ்வாறு உண்பதால் சர்க்கரை நோய், உடல் பருமன், மாதவிடாய் பிரச்சனைகள், மூட்டுவலி, இரத்த அழுத்தம், இருதய பிரச்சனைகள், குழந்தையின்மை மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு.
·         மன இறுக்க சூழ்நிலையில் இருந்து விடுபடுதல், மன அழுத்த மேலாண்மை சிகிச்சை, உணவுக் கட்டுப்பாடு, மற்றும் சீர்சிந்தனை சிகிச்சை ஆகியவற்றால் அதீத உண்ணுதல் பழக்கத்தை கண்காணித்து அதிலிருந்து விடுபட முடியும்.
·         அதி தீவிர பிரச்சனைக்கு சமீபத்திய ஆராய்ச்சி மூலம் LDX என்ற மருந்து கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
·         ஆண்டிராய்டு போனில் Rise up என்ற செயலியில் (Recovery Record – iPhone) இந்நோய்க்கு வேண்டிய தகவல் மற்றும் சுய உதவியினையும் பெறலாம்.

No comments:

Post a Comment