Wednesday, January 22, 2020

தாய்ப்பாலும் மனநலமும்

தாய்ப்பாலும் மனநலமும்
டாக்டர் எஸ் நாகராஜன் 


  •          குழந்தை பிறப்புக்கு பிறகு தாய்ப்பால் தொடர்ந்து தருவதன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சி, அறிவுத்திறன் வளர்ச்சி, சமூகத்துடன் ஒத்துப்போகும் மனப்பாங்கு மற்றும் உணர்வு திறன் வளர்ச்சி ஆகியவை அதிகமாகின்றன. தாய்மார்களுக்கு மன அழுத்தத்தை குறைத்தல் மற்றும் குழந்தையுடன் இணங்கிப் போகும் மனப்பான்மையும் தாய்ப்பால் தருவதன் மூலம் அதிகமாகிறது. தாய்ப்பால் வெறும் உணவு மட்டும் அல்ல அது ஒரு இன்றியமையாத குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் உதவி புரியும் ஓர் அமிர்தமாகும்.


குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள்


  •               ஆறு மாத தாய்ப்பால் கொடுத்தலும் மேலும் ஒரு வருடத்திற்கு இணை உணவுடன் தாய்ப்பால் தருவதை தொடர்வதாலும் குழந்தைகளின் ஞாபகத்திறன் மொழி வளர்ச்சி திறன் மற்றும் உடல் வளர்ச்சி சார்ந்த நுண் திறன்கள் ஆகியவை தாய்ப்பால் அருந்தாத குழந்தைகளை விட அதிகமாக இருக்கும்
  •             வார்த்தைகளை அறிந்து கொள்ளும் திறன் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் ஆகியவை ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் இடம் அதிகமாக இருக்கும் குழந்தை பிறந்த உடனேயே தாய்ப்பால் தருவதை ஊக்குவிப்பதன் மூலம் அறிவுத்திறன் வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகளை கலாம் என்று அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன நன்மை பயக்கும் கொழுப்பு அமிலங்களான DHA மற்றும் ARACHIDONIC ACID தாய்ப்பாலில் அதிகம் உள்ளன இவை மூளை நரம்புகளின் மேற் போர்வையான மயலின் போர்வையின் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை.
  • டி ஹெச் ஏ ஆறு மாதங்களுக்கு குழந்தைகளால் உருவாக்க முடிவதில்லை அது தாய்ப்பால் மூலமே அபரீதமாக கிடைக்கிறது
  • நரம்புகளின் மேற்பார்வை வளர்ச்சி ஒட்டுமொத்த மூளை பெரிதாகுதல் மூளையின் வளர்ச்சி மற்றும் உள்ளே இருக்கும் வெள்ளை அடுக்கு வளர்ச்சி இவை அனைத்தும் தொடர்ந்து தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் இடம் அதிகமாக இருக்கும்தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் மூன்று மாதத்திலேயே சுறுசுறுப்பையும் சுறுசுறுப்பையும் பெற்றுவிடுகின்றனர் சூழ்நிலைகளை ஆர்வத்துடன் ஆராயும் மனப்பான்மை வெகு சீக்கிரமே உருவாகிவிடுகிறது முதல் ஆறு மாதங்கள் உடன் தொடர்ந்து தாய்ப்பால் அருந்தும் அறிவுக்கூர்மை குழந்தைப்பருவம் மட்டுமல்லாது பெரியவர்கள் ஆனதும் தொடரலாம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன
  •  20 முதல் 40 வரையான பெரியவர்களிடையே எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் தாய்ப்பால் அருந்தாத குழந்தைகள் அதிக ஆக்ரோஷ திறனுள்ளவர்களாக இருந்தார்கள் என்று அறியப்பட்டுள்ளது குழந்தைப் பருவத்தில் தாய்ப்பால் அருந்திய குழந்தைகளிடம் அத்தகைய ஆக்ரோஷம் குறைவாகவே இருக்கும்



    தாய்மாருக்கு ஏற்படும் நன்மைகள் 
            தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு முன்பு கூடிய அதிக எடை தாய்ப்பால் உருவாக்குவதற்காக பயன்படுத்தப்படுவதால் எடை குறைப்பில் முக்கியத்துவம் பெறுகிறது. பிரசவத்திற்குப் பின்பு ஏற்படும் மன அழுத்தத்தை குறைத்து சந்தோஷமான மனநிலையை பெருக்குவதில் பயன்படும் செரடோனின் என்னும் வேதிப்பொருள் தாய்ப்பால் தருவதன் மூலம் அதிகமாக உற்பத்தியாகிறது. ஆக்ஸிடோசின் மற்றும் ப்ரோலாக்டின் என்னும் இயற்கை மன அழுத்தம் நீக்கும் ஹார்மோன்கள் தாய்ப்பால் தருவதன் மூலம் அதிகமாக சுரக்கின்றன. தாய்ப்பால் தருவதன் மூலம் தாய்மார்களின் நம்பிக்கை மற்றும் சுயமரியாதையும் அதிகமாகிறது. தாய்ப்பால் தாய்மார்களிடம் குடும்பத்திலும் அமைதி நிலவுவதை உறுதி செய்கிறது. ஏனெனில் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் குறைவாக அழுகின்றன மற்றும் குறைந்த அளவிலேயே வியாதி உருகுகின்றன.

           தாய்மாருக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான பாச இணைப்பிற்கும் உணர்வு இயக்கத்திற்கும் தாய்ப்பால் கொடுப்பது காரணமாகிறது. குழந்தையின் ஆரம்ப காலத்தில் கிடைக்கும் பிணைப்பு எதிர்காலத்தில் அதன் சமூக ஒத்துணர்வு வளர்ச்சிக்கும் நடக்கும் காரணமாகிறது. தாய்ப்பால் தருவதன் மூலம் ஏற்படும் பிணைப்பினால் குழந்தைகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை முன்பே கண்காணித்து அவர்களுக்குத் தேவைப் படுவதை உடனே தர முடிகிறது. இதனால் குழந்தை தன்னுடைய தாய் மற்றும் குடும்பத்தினர் மீது நம்பிக்கை கொள்வது மற்றும் அவர்கள் சொற்படி நடப்பது ஆகியவை அதிகமாகும்.

No comments:

Post a Comment